விலையுயர்ந்த பினாயில் போட்டாலும் கழிவறை துர்நாற்றம் போகலயா?… ரெண்டு ரூபாயில் கமகமக்க வைக்கலாம்… – Health Tips In Tamil

விலையுயர்ந்த பினாயில் போட்டாலும் கழிவறை துர்நாற்றம் போகலயா?… ரெண்டு ரூபாயில் கமகமக்க வைக்கலாம்…

இந்த செய்தியைப் பகிர்க

கழிவறையில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க இயற்கையில் உள்ள அற்புதமான வழிகள் இதோ!

எலுமிச்சை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் கழிவறையின் தரை மற்றும் சின்க்களில் தெளித்து விட்டு, சிறிது நேரம் கழித்து, நீரை ஊற்ற வேண்டும். இதனால் கழிவறையில் துர்நாற்றம் ஏற்படாது.

பேக்கிங் சோடாவை ஒரு பக்கெட் நீரில் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் கழிவறையில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

வினிகர் கருப்பு அல்லது ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து கழிவறையை சுத்தம் செய்யலாம். இதனால் கழிவறையில் உள்ள துர்நாற்றம் மட்டுமின்றி, அழுக்குகளும் முழுமையாக போய்விடும்.

நல்ல நறுமணமிக்க சோப்பு தூளை நீரில் கலந்து, அந்த சோப்பு நீரை கொண்டு கழிவறையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழுவினால், கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

நறுமணமிக்க எண்ணெயும் கழிவறை துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது என்பதால் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன், கழிவறையின் மூலைகளில் தெளித்து விட்டு பின் சுத்தம் செய்ய வேண்டும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Julie