பல நோய்களுக்கு நுழைவு வாயில் பரோட்டா! – Health Tips In Tamil

பல நோய்களுக்கு நுழைவு வாயில் பரோட்டா!

இந்த செய்தியைப் பகிர்க

இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரித்துள்ளது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பரோட்டாவையும் ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரித்துள்ளது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பரோட்டாவையும் ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

ஏனெனில் காலையில் மைதாவில் செய்யப்பட்ட பூரி , மதியம் சோறுக்கு பதிலாக பீட்சா, பர்கர், மாலையில் பானி பூரி, இரவில் புரோட்டா என இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை உள்ளது.

சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவில் உருவாகும் பரோட்டா, உடல் எடையைக் கூட்டும். அதுவும் குழந்தைப் பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இள வயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை (LDL) அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.

மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு (Glycemic index) அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்கவேண்டிய முக்கிய உணவு பரோட்டா.

மைதாவைப் பட்டுப்போல மென்மையாக்க பயன்படும் `அல்லோக்ஸான்’ (Alloxan) எனும் வேதிப்பொருள், நேரடியாக கணையத்தைத் (Pancreas) தாக்கி, சர்க்கரைநோயை உண்டாக்கலாம் என்பது அண்மைக் காலமாக பொதுவெளியில் உள்ள கருத்து.

சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் திறனை ஆய்வு செய்வதற்காக, ஆய்வக விலங்குகளில் செயற்கையாக சர்க்கரைநோயை உண்டாக்கப் பயன்படும் பொருள்தான் அல்லோக்ஸான். ஆக, மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மலச்சிக்கலை உருவாக்குவதில் மைதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்குத் தடங்கலை ஏற்படுத்தும.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Julie