வேரோடு முடி கொட்டுதா?… இந்த நேச்சுரல் ஆயிலை யூஸ் பண்ணினா உடனே நின்னுடும்… – Health Tips In Tamil

வேரோடு முடி கொட்டுதா?… இந்த நேச்சுரல் ஆயிலை யூஸ் பண்ணினா உடனே நின்னுடும்…

இந்த செய்தியைப் பகிர்க

வழுக்கையாக இருப்பவர்களைத் தவிர மற்ற எல்லோருக்குமே இருக்கும் பொதுவான பிரச்னை தலைமுடி உதிர்தல் தான். இப்படி வேர் வேராகக் கொட்டுவதைப் பாா்த்தால் எங்கே நமக்கும் சொட்டை விழுந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பவர்கள் ஏராளம்.

இதற்காக டீவி விளம்பரங்களில் வரும் அத்தனை ஷாம்புகளையும் ஹேர்ஆயிலையும் முயற்சி செய்து பார்த்து இன்னும் அதிகமாக முடி போனதுதான் நம்மில் பலருக்கும் மிச்சம்.

ஆனால் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைதான் நம்முடையது. ஆம். நம்முடைய முன்னோர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து வாரி தலையைக் குளிர்ச்சியோடு வைத்துக் கொண்டனர். ஆனால் நாம் சீரம் என்ற பெயரில் முடியில் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் ஆயிலை வாங்கித் தேய்த்துக் கொண்டிருக்கிறோம்.

நம் வீட்டு அடுப்பங்கரையில் இருக்கும் சில சமையல் பொருள்களைக் கொண்டே தலைமுடி உதிர்தலுக்கு தீர்வு காண முடியும். அதுமட்டுல்ல. அடர்த்தியான கருமையான கூந்தலையும் பெற முடியும்.

அப்படி என்னென்ன பொருள்கள் முடி உதிர்தலைத் தடுக்க முடியின் வளர்ச்சியைத் தூண்டும்?

பூண்டின் தோலை 50 கிராம் அளவுக்கு எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுக்க வேண்டும். பின்பு அந்த தோலை மட்டும் எடுத்து நன்கு அரைத்து மீணடும் அதே எண்ணெயில் போட்டு பேஸ்ட் போல குழப்பி, முடி உதிர்ந்து சொட்டையாக இருக்கும் இடத்தில் தேய்த்தாலும் அந்த இடங்களில் முடி மிக அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

கரிசலாங்கன்னி இலையை 200 கிராம் அளவு எடுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, அதை அரை லிட்டரில் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைத் தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர முடி கருமையாக வளர ஆரம்பிக்கும்.

செம்பருத்தி இலை ஒரு கைப்பிடி, செம்பருத்தி பூ ஒரு கைப்பிடி, வெந்தயம் 2 ஸ்பூன், துளசி இலைகள் சிறிதளவு ஆகியவற்றை எடுத்து, வெற்தயத்தைத் தவிர மற்றவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்கு மை போல அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து அதில் வெந்தயத்தையும் போட்டு மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வரை நன்கு காய்ச்சுங்கள்.

பின்பு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து ஒரு வாரம் வெயிலில் எடுத்து வைத்துவிடுங்கள். அதன்பிறகு இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்தால் தலையும் உடலும் குளிர்ச்சியாவதோடு தலைமுடி நீண்டு வளர ஆரம்பிக்கும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Julie