குழந்தையின் சருமத்தை பத்திரமா பாத்துக்கோங்க… – Health Tips In Tamil

குழந்தையின் சருமத்தை பத்திரமா பாத்துக்கோங்க…

இந்த செய்தியைப் பகிர்க

பெண்களுடைய வாழ்க்கையில் தாய்மை என்பது உற்சாகமும் குதூகலமும் நிறைந்த பருவம். தாய்மை அடைந்துவிட்டாலே கூடவே சேர்ந்து பொறுப்பகளும் அதிகமாகிவிடும். எல்லா தாய்மார்களும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வது தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் சருமப் பராமரிப்புக்கும் தான்.

பெண்களுடைய வாழ்க்கையில் தாய்மை என்பது உற்சாகமும் குதூகலமும் நிறைந்த பருவம். தாய்மை அடைந்துவிட்டாலே கூடவே சேர்ந்து பொறுப்புகளும் அதிகமாகிவிடும். எல்லா தாய்மார்களும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வது தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் சருமப் பராமரிப்புக்கும் தான்.

அதிலும் பெண் குழந்தையாக இருந்தால் சொல்லவே வேண்டாம். தாய்மார்களின் பொறுப்பு இருமடங்காகக் கூடிவிடுகிறது.

குழந்தைகளின் சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க பல வழிகளுண்டு.

குழந்தைகளின் சருமம் மிக மிக மென்மையாக இருக்கும். ஆதலால் பராமரிக்கும்போது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

ஆயில் மசாஜ்

குழந்தைக்கு தினமும் நன்கு ஆயில் மசாஜ் செய்து, குளிக்க வைப்பது நல்லது. குறிப்பாக, ஆயிலை சூடு செய்து, வெதுவெப்பாக இருக்கும் போது, தேய்க்க வேண்டும். இது மிகப்பழங்கால முறை தான் என்றாலும் பயனுடையது. எண்ணெய் குழந்தையின் மேனிக்கு சிறந்த மாய்ச்சரைஸராகப் பயன்படுகிறது.

வெந்நீர் குளியல்

சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்து குழந்தைக்குக் குளிப்பாட்டுவார்கள். பெரியவர்களாலேயே அதிக சூட்டையும் அதிக குளிரையும் தாங்கிக் கொள்ள முடியாதபோது, குழந்தையின் மென்மையான சருமம் எப்படி தாங்கும்? அதனால் அதிக குளிரும் இல்லாமல். அதிகமான சூடும் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும்.

மாய்ச்சரைஸர்

குழந்தைகளின் உடல் மிக மென்மையாக இருப்பதால், அதற்கென தனியே மாய்ச்சரைஸர்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். இல்லாவிடில், மஞ்சள், பால், சந்தனப்பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து குழைத்து, குழந்தையின் உடலில் தடவி, அரைமணி நேரம் கழித்து குளிக்க வைக்கலாம். இது குழந்தையின் நிறத்தையும் கூட்டும்.

ஸ்கிரப்

குழந்தைகளின் உடல், முகம் ஆகிய இடங்களில் முடி அதிகமாக இருக்கும். அதன் வேர்க்கால்கள் பலமின்றி இருக்கும். உடலில் எதையாவது கவனமில்லாமல் போட்டு தேய்த்தால், வலி உண்டாகும். அதனால், பேபி ஸ்கிரப் கடைகளில் தனியாகக் கிடைக்கின்றன.

அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். இல்லையென்றால், கடலை மாவு, ரோஸ் வாட்டர், பேபி ஆயில் மற்றும் பயத்தமாவு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து தேய்க்கவும். இது ஒரு சிறந்த ஸ்கிரப் ஆகச் செயல்படும். குழந்தையின் உடலில் உள்ள தேவையில்லாத முடியையும் அகற்றும்.

சோப்

குழந்தையைக் குளிக்க வைக்கும் போது சோப்பைப் பயன்படுத்தாதீர்கள். சோப்பைப் பயன்படுத்தினா்ல குழந்தையின் சருமம் சீக்கரமாக வறட்சியடைந்துவிடும். அதனால் பால் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Julie