ஆண்களுக்கு அந்த இடத்தில் அரிப்பு உண்டாகக் காரணம் இதுதான்… ஜாக்கிரதை… – Health Tips In Tamil

ஆண்களுக்கு அந்த இடத்தில் அரிப்பு உண்டாகக் காரணம் இதுதான்… ஜாக்கிரதை…

இந்த செய்தியைப் பகிர்க

இரண்டு விஷயங்கள் பெரும் தர்மசங்கடத்தை உண்டாக்கும் ஒன்று நால்வர் நம்மை சுற்றி இருக்கும் போது வாயு வெளியேற்றுவது, அடுத்தது அந்தரங்க உறுப்புகளில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்துவது.

இந்த இரண்டையுமே அடக்குவதும் கடினம், பொறுத்துக் கொள்வதும் கடினம்.

அதிலும், ஆண்களுக்குத் தொடைகளின் இடுக்கில் ஏற்படும் அரிப்பை காட்டிலும், ஆணுறுப்பில் ஏற்படும் அரிப்பு பெரும் தர்மசங்கடமாக இருக்கும்.

அசௌகரியமான சூழலை ஏற்படுத்தும். ஏன் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படுகிறது?

காய்ச்சல் சிறுநீர் பாதை தொற்று / பிரச்சனை வீக்கம் தடிப்புகள் எரிச்சல் உணர்வு சிவந்து காணப்படுதல்

அலுவலகத்தில் உட்கார முடியாத நிலை ஏற்படுத்தும், நால்வர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போது நிற்க முடியாத நிலை உண்டாகலாம், சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம், தாம்பத்திய வாழ்வில் கூட இது தாக்கங்கள் உண்டாக்கலாம்.

ஆணுறுப்பின் உட்பகுதியில் ஸ்மெக்கா எனும் வெள்ளை துகள் படிமம் சேரும். இதை தினமும் குளிக்கும் போது சுத்தம் செய்ய வேண்டும். இதை சரியாக செய்யாமல் இருந்தால் அரிப்பு உண்டாகலாம்.

நாம் பயன்படுத்தும் சோப்பு, துணி துவைக்கும் டிடர்ஜென்ட், உள்ளாடை சுகாதாரம், இரசாயன பொருள் சேர்க்கை கூட இதற்கான காரணிகளாக இருக்கலாம். இதன் மூலம் உண்டான எதிர்வினை தாக்கமாக இருக்கலாம்.

மேலும் ஆரோக்கிய செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Julie