மழைக்காலத்துல கொசுப் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம்? – Health Tips In Tamil

மழைக்காலத்துல கொசுப் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம்?

இந்த செய்தியைப் பகிர்க

கொசுவும் அசுத்தமான தண்ணீரும் தான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அசுத்தமான தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் தான் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

அதிலும் குறிப்பாக மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போதும். ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நம்மைப் பாடாய்ப்படுத்துவதும்…

கொசுக்கடியினால் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சலின் பாதிப்புகள் அதிகமாகப் பரவுகின்றன. அதனால் இந்த கொசுக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும்?

கெமிக்கல் கலந்த க்ரீம்களோ, ஹிட்டோ வாங்கிப் பயன்படுத்துவதால் சுவாசப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அது ஆபத்தும் கூட. சரும அலர்ஜி போன்ற பல பிரச்னைகளை உண்டாக்கும்.

அதனால் வீட்டிலேயே இயற்கையாகக் கிடைக்கும் சில பொருள்களைக் கொண்டு, கொசுக்களை எப்படி ஒழிக்க முடியும்?

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வேப்ப எண்ணெயைக் கலந்து சருமத்தில் தேய்த்துக் கொண்டால், கொசுக்கள் கடிக்காது.

ஏனெனில் வேம்பின் இயற்கையான நறுமணம் கொசுக்களை வராமல் தடுத்து விடும். வேம்பு எண்ணெயைப் பயன்படுத்துவதால், சருமத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.

இந்த முறையை குழந்தைகளுக்கு கூட பயன்படுத்தலாம். இதனால் எந்தவொரு பாதிப்புகளும் குழந்தைகளுக்கு ஏற்படாது. ஆனால் அரிப்புகள் ஏற்படுகிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீம் ஆயில் டிஃயூசரில் (neem oil diffuser) சில துளிகள் வேப்ப எண்ணெயில் கலந்து அறையின் ஒரு மூலையில் வைத்து விட்டாலே போதும். கொசுக்களின் தொல்லைகள் இருக்காது.

காய்ந்த வேப்பிலையைத் தீயில் போட்டு வீட்டைச்சுற்றி புகை போட்டாலும், கொசுக்களின் தொல்லைகள் வராது.

கொசுக்களை விரட்டும் பூண்டு, சாமந்தி போன்ற செடிகளை வீட்டின் முன் வளர்த்து வந்தால், கொசுக்கள் வருவதை தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கிய செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Julie