கைகளை எப்படி கழுவ வேண்டும் – Health Tips In Tamil

கைகளை எப்படி கழுவ வேண்டும்

இந்த செய்தியைப் பகிர்க

கைகளில் படிந்திருக்கும் கிருமிகள், உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அதனால் நன்றாக கைகளை கழுவ வேண்டும். எப்படி தெரியுமா?

கைகளை சுத்தமாக வைத்திருப்பது நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும். கைகளில் படிந்திருக்கும் கிருமிகள், உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அதனால் நன்றாக கைகளை கழுவ வேண்டும். எப்படி தெரியுமா?

சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 20 நொடிகளாவது சோப்பிட்டு கைவிரல்களை தேய்த்து கழுவ வேண்டும். விரல் இடுக்குகளையும் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்கள் அதில் படிந்திருந்து நோய் பாதிப்புக்குள்ளாக்கி விடும். கைகளை கழுவிய பிறகு ஈரப்பதமான நிலையிலேயே உலரவைத்து விடக்கூடாது. டவலை கொண்டு துடைக்க வேண்டும். மூன்று முறைக்கு மேல் டவலை துவைக்காமல் பயன்படுத்தக் கூடாது. அடுத்தவர்களின் டவலையும் உபயோகப் படுத்தக்கூடாது.

நோய்வாய்பட்டிருப்பவர்களை பார்த்து நலம் விசாரிக்க சென்றிருந்தால் வீடு திரும்பியதும் மறக்காமல் கைகளை கழுவி விட வேண்டும். காயங்களுக்கு மருந்திடுவதற்கு முன்பும், பின்பும் கைவிரல்களை சுத்தமாக தேய்த்து கழுவுங்கள். ஒருசிலர் காயங்களுக்கு மருந்து போட்டபிறகுதான் கைகளை கழுவுவார்கள். அது தவறான பழக்கம். கைகளில் படிந்திருக்கும் கிருமிகள் காயங்களில் படிந்து பாதிப்பை உருவாக்கிவிடும். அதனால் மருந்திடுவதற்கு முன்பும் கழுவ வேண்டும்.

கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவிவிட வேண்டும். வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டிவிட்டு வீடு திரும்பியதும் கைகளை கழுவுவதும் அவசியமானது. வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுடன் விளையாடினால் உடனே கைகளை சோப்பு போட்டு கழுவிவிட வேண்டும். இறைச்சி, முட்டை போன்ற உணவு வகைகளை சாப்பிட்ட பிறகும் சோப்பு போட்டு கழுவுவது நல்லது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie