குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள் – Health Tips In Tamil

குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

ஒரு சிலருக்கு மட்டுமே உடல், மனகுறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க என்ன காரணம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் மன நல குறைபாடுகளோடு பிறப்பதற்கு பிரதானமான காரணமாக கூறப்படுவது, நெருங்கிய உறவில் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் நடைமுறை தான் என்கின்றனர். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்கின்ற ஆண், பெண்களுக்கு எந்த ஒரு உடல், மன நல குறைபாடுகள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களிடம் இருக்கிற தங்கள் மூதாதையர்களின் மரபணுக்களை தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு கடத்துவதால், அந்த மூதாதையர்களுக்கு இருந்த உடல், மன நல குறைபாடுகள் இப்போது பிறக்கின்ற குழந்தைக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.

பெண்கள் முதன் முதலில் கர்ப்பம் தரித்த காலம் முதல் குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் சாப்பிடுவது ஊட்டச்சத்துகள் தான் வயிற்றில் வளருகின்ற தங்களின் குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடிப்படையாக அமைகிறது. சத்து இல்லாத, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் வகையிலான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் அது கருவில் வளரும் குழந்தையின் உடலில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பெண்கள் கர்ப்பமடைந்த பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சராசரியான அளவிற்கு மற்றும் கூடுதலாக இருப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதீத ரத்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதால், அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

ஒரு தாயின் வயிற்றில் 10 மாத காலம் இருந்து பின்பு பிறக்கின்ற குழந்தை உடல் ரீதியான முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்கும். 10 மாதத்திற்கும் முன்பாகவே குழந்தை பிறக்கின்ற நிலையை குறை பிரசவம் என்கின்றனர். இப்படி குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. இந்த குறைபிரசவமாக குழந்தை பிறப்பதால் முழுமையான உடல் வளர்ச்சி பெறாமல் அங்க குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கின்ற நிலையை அதிகரிக்கிறது.

10 மாத காலம் கருவில் குழந்தை சுமக்கும் பெண்கள், தங்கள் வயிற்றில் வளருகின்ற குழந்தையின் நிலையை அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சென்று சில வாரங்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடலை கருக்கொடி சுற்றிக்கொள்வது, குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பது போன்றவை குழந்தை உடற்குறைபாடு கொண்டு பிறக்கின்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

10 மாத காலம் கழிந்ததும் பிரசவ வலி எடுத்து, குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் தலைக்கு பதிலாக கால் முதலில் வெளியே தலைக்கு பிரசவ காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் எலும்பு முறிவு போன்ற காரணங்கள் குழந்தை ஊனமாக பிறக்கின்ற நிலையை உண்டாக்குகிறது.

மேற்கூறிய பிரச்சனைகளை தவிர்ப்பதன் மூலமும், பேறு காலத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதன் மூலமும் குழந்தை உடல் மன நல குறைபாடுகள் இல்லாமல் பிறக்க செய்ய முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie