உங்கள் எதிர்காலம் வளமாக இருக்க வேண்டுமா? இந்த வாஸ்து மாற்றங்களை செய்தாலே போதும் – Health Tips In Tamil

உங்கள் எதிர்காலம் வளமாக இருக்க வேண்டுமா? இந்த வாஸ்து மாற்றங்களை செய்தாலே போதும்

இந்த செய்தியைப் பகிர்க

வாஸ்து நமது வாழ்க்கையிலும் ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது.

வாஸ்து சாஸ்திரம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.

அந்தவகையில் வாஸ்துப்படி நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கவும், வாய்ப்புகளை வரவேற்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

. தூங்கும்போது எப்பொழுதும் கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இது உங்களின் எதிர்காலத்திற்கும் நல்லதாகும்.

. உங்கள் வீட்டின் கழிவறை எப்பொழுதும் வடக்கு திசையில் இருக்கக்கூடாது. இது உங்களுக்கான வாய்ப்புகள் வருவதை தடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே இதை சரியான திசையில் மாற்றி வைப்பதுதான் உங்களுக்கு நல்லது.

. நீங்கள் ஏற்கனவே வேலையில் இருந்து பதவி உயர்வுக்காக காத்திருப்பவராக இருப்பின் நீங்கள் உங்கள் அலுவலக மேசை இருக்கும் திசையின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

. வேலை செய்யும்போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்வது நல்ல பலனை அளிக்கும். இது உங்களின் கடின உழைப்பை அனைவருக்கும் தெரியும்படி வெளிக்கொணரும்.

. உங்கள் வீட்டின் வாயிற் கதவு எப்பொழுதும் உங்கள் இல்லத்திற்கு நேர்மறை சக்திகளை அழைத்துவரும் திசையில் இருக்க வேண்டும். தவறான திசையில் உங்கள் வீட்டின் கதவு இருப்பது உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தடுக்கக்கூடும்.

. வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி அமரும் போது உங்கள் பீமுக்கு கீழே அமர வேண்டாம். இது உங்கள் வேலையில் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் இதனால் எந்தவித நேர்மறை பலன்களும் கிடைக்காது.

. உங்கள் திறமையாக வேலை செய்வதற்கும், வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கும் அதிக ஆற்றல் தேவை.எனவே நேர்மறை ஆற்றலை வழங்கும் சில படிகங்களையும், பொருட்களையும் உங்கள் மேஜையின் மீது வைக்கவும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie