தப்பி தவறி கூட இந்த உணவுகளோடு இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிட்டு விடாதீங்க…. உடல் உபாதைகள் ஏற்படுமாம்! – Health Tips In Tamil

தப்பி தவறி கூட இந்த உணவுகளோடு இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிட்டு விடாதீங்க…. உடல் உபாதைகள் ஏற்படுமாம்!

இந்த செய்தியைப் பகிர்க

பொதுவாக நாம் உண்ணும் சில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட கூடாது என்று தற்போது பார்க்கலாம்.

. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு உண்டால் “வெண் மேகம்“ போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

. காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர் குடிக்கலாம்.

. ஆஸ்துமா, சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

. வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்க்க கூடாது.

. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

. மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie