மார்பகங்களின் அடிப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா? இதோ அற்புத டிப்ஸ் – Health Tips In Tamil

மார்பகங்களின் அடிப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா? இதோ அற்புத டிப்ஸ்

இந்த செய்தியைப் பகிர்க

பொதுவாக அனைவருக்குமெ உடலின் சில பகுதிகளான அக்குள், மார்பகங்களுக்கு அடிப்பகுதி, கழுத்து போன்றவையும் கருமையாக இருக்கும்.

ஏனெனில் அப்பகுதியில் மடிப்புக்கள், உராய்வு, அதிகளவு வியர்வை வெளியேறுவது மற்றும் வேறுசில காரணங்களாக இருக்கும்.

இதனை இயற்கை முறையில் எளிதில் போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

. முதலில் மார்பகங்களின் அடிப்பகுதியை நீரால் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, சோள மாவை அப்பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

. ஆப்பிள் சீடர் வினிகரை சரிசம அளவில் நீரில் கலந்து எடுத்து, காட்டன் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வேகமாக கருமையைப் போக்கலாம்.

. பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மார்பகங்களுக்கு அடியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் மார்பகங்களுக்கு அடியில் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, இறந்த செல்களும் நீக்கப்படும்.

. எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

. பாலை காட்டனில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

. உருளைக்கிழங்கை அரைத்து மார்பகங்களின் அடியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், எப்பேற்பட்ட கருமையும் மறையும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie