எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ஆசனம் – Health Tips In Tamil

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ஆசனம்

இந்த செய்தியைப் பகிர்க

குறிப்பிட்ட வயதை தாண்டும் போது எலும்பு தேய்மானம் ஏற்படுவது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களும், தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும் அதிகம் பாதிக்கப்படுவது முதுகு தண்டு.

எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாங்க முடியாத வலி இவற்றிலிருந்து விடுபட புஜ பாத பீடாசனம் துணைப்புரியும்.

செய்முறை

விரிப்பின் மீது மல்லாந்து படுத்து இரு கால்களை முட்டி வரை குத்துக்காலிட்டு மடக்கவும்.

தலை, கழுத்து, தோள், பாதங்கள் தரையிலிருக்கும் படி செய்யவும்.

இடுப்பு, முதுகு, இருதொடைகள் உயர்த்தி, கைகளால் இடுப்பை தாங்கி கொள்ளவும்.

காலை வேளையில் இயல்பான மூச்சுடன் இரண்டு தடவை 15 வினாடிகள் செய்யவும்.

இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்

அதிக உடல் எடை கொண்டவர்களும், தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களும் இதை செய்யலாம்.

இதனால் ஏற்படும் இடுப்பெலும்பு தேய்மானம், முதுகு தண்டு தேய்மானம், அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தரும்.

இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்துப்பட்டை மற்றும் இடுப்பு பட்டை அணிவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie