வாயுத்தொல்லையை போக்கும் கஞ்சி செய்வது எப்படி? – Health Tips In Tamil

வாயுத்தொல்லையை போக்கும் கஞ்சி செய்வது எப்படி?

இந்த செய்தியைப் பகிர்க

வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லை வர முக்கிய காரணமாகும்.

செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது.

வாயுத்தொல்லை இருக்கும் போதும், கர்ப்பிணிகள் மாதமாக இருக்கும் போதும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கஞ்சியை பருகலாம்.

அந்தவகையில் இந்த தொல்லையிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கஞ்சியை பருகுங்கள்.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 1 கப்
முருங்கைக்கீரை – 1/4 கப்
தேங்காய் பால் – 1 கப்
பால் – 1 கப்
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 துண்டு
சீரகம் – 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

அரிசியை தண்ணீரில் சுத்தம் செய்து குக்கரில் போட்டு 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவேண்டும். கஞ்சி செய்வதால் தண்ணீர் 4 கப் ஊற்றவேண்டும்.

கஞ்சிக்கு போதுமான அளவு உப்பு , பூண்டு, சீரகம், வெந்தயம், பால் கால் கப் சேர்த்து வேகவிடவேண்டும்.

கஞ்சி கெட்டியாக சோறு பதத்தில் வெந்து இருப்பதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மீதமுள்ள பால், முருங்கை இலை, ஆகியவற்றை கலந்து மீண்டும் நன்றாக வேகவிட்டு உப்பு சரிபார்த்து இறக்கினால் வாயுக்கஞ்சி தயார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie