எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த டயட்டை பின்பற்றுங்க – Health Tips In Tamil

எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த டயட்டை பின்பற்றுங்க

இந்த செய்தியைப் பகிர்க

பொதுவாக டயட் என்ற பெயரில் பலரும் கண்ட கண்ட உணவு முறைகளை காலம் நேரம் தெரியாமல் சாப்பிட்டு கொண்டு வருகின்றனர்.

இதனால் பலர் பக்க விளைவுகளை அன்றாடம் சந்திக்கின்றனர்.

டயட்டின் போது இறைச்சி மற்றும் பிற விலங்கு பொருட்களின் உட்கொள்ளலைக் குறைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் லாக்டோ வெஜிடேரியன் டயட் என்பது ஒரு சைவ உணவுத் திட்டமாகும்.

இந்த லாக்டோ-சைவ உணவில் அனைத்து தாவர அடிப்படையிலான உணவுகள் மற்றும் தயிர், சீஸ், பால், ஆட்டின் பால் போன்ற பால் பொருட்கள் அடங்குகின்றது.

தற்போது இந்த டயட்டை எப்படி கடைப்பிடிப்பது என்பதை பார்ப்போம்.

திங்கட்கிழமை உணவு திட்டம்

காலை உணவு – இலவங்கப்பட்டை தூள் மற்றும் வெட்டப்பட்ட வாழைப்பழத்துடன் ஓட்ஸ்
மதிய உணவு – இனிப்பு உருளைக்கிழங்கு, குடைமிளகாய் கொண்ட காய்கறி பர்கர் மற்றும் சாலட்
இரவு உணவு – திணை கொண்டு நிரப்பப்பட்ட குடை மிளகாய் , கலப்பு காய்கறிகளும், பீன்ஸ்

செவ்வாய்க்கிழமை உணவு திட்டம்

காலை உணவு – அக்ரூட் பருப்புகள் மற்றும் கலப்பு பெர்ரிகளுடன் தயிர்
மதிய உணவு – பழுப்பு அரிசி, பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றைக் கொண்ட பருப்பு கறி
இரவு உணவு- குடை மிளகாய் வறுவல், கேரட், பச்சை பீன்ஸ், கேரட் மற்றும் எள்-இஞ்சி டோஃபு

புதன்கிழமை உணவு திட்டம்

காலை உணவு – காய்கறிகளும், பழங்களும், மோர் புரதமும், நட் பட்டர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த ஸ்மூதி
மதிய உணவு – வறுத்த கேரட்டுடன் கொண்டைக்கடலை பை
இரவு உணவு – ப்ரகோலி மற்றும் சோயா

வியாழக்கிழமை உணவு திட்டம்

காலை உணவு – பால், சியா விதைகள் மற்றும் பழங்களுடன் ஓட்ஸ்
மதிய உணவு- கருப்பு பீன்ஸ், சீஸ், அரிசி, சல்சா, அவகாடோ மற்றும் காய்கறிகள்
இரவு உணவு- புளிப்பு கிரீம் சேர்க்கப்பட்ட காய்கறிகள் மற்றும் சாலட்

வெள்ளிக்கிழமை உணவு திட்டம்

காலை உணவு – தக்காளி மற்றும் ஃபெட்டா சீஸ் உடன் அவகாடோ டோஸ்ட்
மதிய உணவு – வறுத்த அஸ்பாரகஸ் மற்றும் பயறு
இரவு உணவு – தஹினி, வெங்காயம், வோக்கோசு, தக்காளி, லேட்யுஸ் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த ராப்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie

Leave a Reply