சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க… இந்த உணவுகளை சாப்பிடுங்க – Health Tips In Tamil

சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க… இந்த உணவுகளை சாப்பிடுங்க

இந்த செய்தியைப் பகிர்க

சரியாக நீர் அருந்துவது, அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகளை சாப்பிடுவது, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஆகிய காரணத்தினால் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுகிறது.

சிறுநீரகங்கள் செயலிழந்தால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலே தங்கி, உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதுபோன்ற சிறுநீரக தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க சில உணவுகளை சாப்பிட்டால் போதும்.

ஓமம்

தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ள வேண்டும் அல்லது ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வாரம் இரண்டு நாட்கள் குடிக்கலாம்.

புளி

புளியில் உள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. எனவே புளியை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் சிறுநீரக பிரச்சனைகள் வராது.

மஞ்சள்

மஞ்சள் சிறுநீரக செயலிழப்பை தவிர்த்து, அதன் செயல்பாட்டை புத்துணர்வாக்க உதவுகிறது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

துளசி

துளசி இலையின் சாறுடன் தேன் கலந்து தொடர்ந்து 6 நாட்கள் சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். ஒருவேளை சிறுநீரகக் கற்கள் இருந்தாலும் கரைந்து விடும்.

வெங்காயம்

வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், அது கழிவுப் பொருட்களை கரைத்து, அலர்ஜியை குறைத்து அடிக்கடி ஏற்படும் சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

காய்கறிகள்

பூசணிக்காய், வாழைத்தண்டு, பூண்டு, வெங்காயம், கேரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற அனைத்து காய்கறிகளையும் அடிகக்டி உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

பழங்கள்

ஆப்பிள், எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் தங்கும் நச்சுக்களை அழித்து, கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

திராட்சை

திராட்சையில் உள்ள நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம், சிறுநீரகக்கல் உருவாகுவதை தடுத்து, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்தின் விதையைப் பிழிந்து, 1 டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறை சேர்த்து சாப்பிட்டால், அது சிறுநீரகக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

அத்திப்பழம்

அத்திபழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு

சிறுநீரக நோய் உள்ளவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், வேகவைத்த கீரையின் நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவை சிறுநீரகத்தை பாதிக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie

Leave a Reply