காய்ச்சலால் பெரும் அவதியா? இந்த சத்தான சூப்பை குடிங்க – Health Tips In Tamil

காய்ச்சலால் பெரும் அவதியா? இந்த சத்தான சூப்பை குடிங்க

இந்த செய்தியைப் பகிர்க

ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது காய்ச்சல் (fever) எனப்படுகின்றது.

காய்ச்சலைக் குறைப்பதற்கு என்னதான் மருந்துகள் இருந்தாலும் சில உணவுகள், சூப்கள் மூலமாகவும் குறைக்கலாம்.

அந்தவகையில் காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்து கொடுத்தால் உடலுக்கு வலிமை கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.

தற்போது அந்த சத்தான சூப்பை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நெஞ்செலும்பு – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
சீரகம், மிளகு – சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
உப்பு – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
மஞ்சள்பொடி – சிறிது
இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.

இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் தயார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie

Leave a Reply