வாஸ்து படி உங்க வீட்டில் அக்னி மூலையில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து விடாதீங்க! உடல்நல பிரச்சினைகள் ஏற்படுமாம் – Health Tips In Tamil

வாஸ்து படி உங்க வீட்டில் அக்னி மூலையில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து விடாதீங்க! உடல்நல பிரச்சினைகள் ஏற்படுமாம்

இந்த செய்தியைப் பகிர்க

அக்னி மூலையை தென்கிழக்கு மூலை எனவும் அழைப்பார்கள். இங்கு அவசியமாக சமையற்கூடம் இருக்க வேண்டும்.

பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும்.

அந்தவகையில் வாஸ்துப்படி அக்னி மூலையில் என்னென்ன வைக்க வேண்டும், வைக்க கூடாது என பாரப்போம்.

. வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலாவிடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணெய், எரிவாயு, போன்றவை) இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

. விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம்.

. அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது.

. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி, (செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது.

. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.

. சமையலறை தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

. வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

. ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie