நவதானிய சூப் செய்வது எப்படி ? – Health Tips In Tamil

நவதானிய சூப் செய்வது எப்படி ?

இந்த செய்தியைப் பகிர்க

நவதானியம் எப்போதும் ஆரோக்கியமானவையே. அவைதான் உடலுக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் நவதானியத்தை சூப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முளைகட்டிய பயறுகள் – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 2 பல்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகு – காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை – தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப் பால் – ஒரு கப்,
புளிக்காத கெட்டி தயிர் – அரை கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

. முளைகட்டிய பயறுகளை தனியாக வேக வைக்கவும்.

. மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

. அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

. பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie