உதட்டைச் சுற்றி புண்ணா ? எப்படி விரைவில் சரி செய்வது? – Health Tips In Tamil

உதட்டைச் சுற்றி புண்ணா ? எப்படி விரைவில் சரி செய்வது?

இந்த செய்தியைப் பகிர்க

நம்மில் சிலருக்கு உடல் வெப்பநிலை காரணமாக உதட்டை சுற்றி புண்கள் வருகின்றது. இது முகத்தையே அசிங்கமாக்கி விடுகின்றது.

குறிப்பாக இது வைட்டமின் குறைபாட்டால் உதட்டின் ஓரங்களில் புண்கள் வரலாம்.

இதனை எளிய முறையில் குணப்படுத்த முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

. உதடுகளில் வறட்சி அதிகம் ஏற்படுவது போல் இருந்தால், தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தேன் தடவுங்கள். இதனால் உதட்டின் ஈரப்பசை அதிகரிப்பதோடு, உதட்டில் இருக்கும் கருமை நீங்கி, உதடு அழகாகும்.

. தூங்கும் முன் சிறிது நெய்யை உதட்டில் தடவ வேண்டும். இதனால் வறட்சி மற்றும் வெடிப்புகள் நீங்குவதோடு மென்மையான உதட்டையும் பெறலாம்.

. க்ரீன் தயாரித்த பின், அந்த பை அல்லது அதன் இலைகளைத் தூக்கிப் போடாமல், அதனைக் கொண்டு 4 நிமிடம் உதட்டை மசாஜ் செய்தால், உதட்டில் ஈரப்பசை அதிகரித்து, வெடிப்புகள் மறையும்.

. தேங்காய் எண்ணெய் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். மேலும் இது ஆன்டி-பாக்டீரியல் தன்மைகளையும் உள்ளடக்கியது. அத்தகைய சுத்தமான தேங்காய் எண்ணெயை ஒருவர் தினமும் பலமுறை உதட்டில் தடவி வந்தால், உதட்டின் ஆரோக்கியம் மற்றும் அழகு மேம்படும்.

. ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன், உதடு மற்றும் முகத்தில் தடவி வந்தால், ஐந்தே நாட்களில் முகம் மற்றும் உதடு பிரச்சனைகளின்றி பொலிவோடும் அழகாகவும் இருப்பதைக் காணலாம்.

. வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து, அதனை உதட்டில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி உதடு வறட்சி மற்றும் வெடிப்பு இருக்கும் போது செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

. 1/2 டீஸ்பூன் சர்க்கரையுடன் 2 துளி ஆலிவ் ஆயில் கலந்து, உதட்டில் தடவி 3-5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, நீரில் கழுவ வேண்டும். பின் உதட்டில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், உதட்டில் இருந்த இறந்த செல்கள் வெளியேறி, உதடு அழகாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

. 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, உதட்டில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டில் உள்ள கருமை மற்றும் வறட்சி நீங்கி, உதடுகள் அழகாக இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie