நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம் செய்வது எப்படி? – Health Tips In Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம் செய்வது எப்படி?

இந்த செய்தியைப் பகிர்க

பூசணியில் இரண்டுவகை உண்டு. சர்க்கரைபூசணி, வெண்பூசணி. இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வெண்ப்பூசணி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும்; மலச்சிக்கலை நீக்கும்; உடல்சோர்வு, மனச்சோர்வு நீக்கி உற்சாகத்தைத் தரும்.

அந்தவகையில் வெண்ப்பூசணியை கொண்டு வெண் பூசணி தயிர் சாதம் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நறுக்கிய வெண்பூசணி – 200 கிராம்
தயிர் – 100 கிராம் (ஒரு கப்)
கொத்தமல்லி – சிறிதளவு
குழைய வேக வைத்த சாதம் – அரை கப்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

செய்முறை

வெண் பூசணியின் தோலைச் சீவிவிட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய வெண் பூசணியை கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

பூசணி நன்றாக வெந்ததும் அதில் ஒரு கப் தயிர், சாதம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பூசணி கலவையில் சேர்க்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி இலையைத் தூவினால் வெண் பூசணி தயிர் சாதம் தயார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie