குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்தில் இருந்து விடுவிப்பது எப்படி? – Health Tips In Tamil

குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்தில் இருந்து விடுவிப்பது எப்படி?

இந்த செய்தியைப் பகிர்க

குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்தால் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றம் ஏற்படும். இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள்.

இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது Flight modeல் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.

குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிக்கும் வழிகள் இவை…

* பெற்றோர், குழந்தைகளுக்கு நல்ல முன்உதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும்.

* ஸ்மார்ட்போனுக்கு பாஸ்வேர்டு போடுங்கள். குழந்தைகள் செல்லும் இணைய பக்கங்களில் ஒரு கண் வையுங்கள்.

* குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை மெல்லமெல்ல குறையுங்கள். விழிப்புணர்வு ஊட்டுவதுடன் அதிலிருந்து விலகி வரும் மனநிலையை உருவாக்குங்கள்.

* குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தை அதிகமாக்குங்கள்.

* ஓவியம் வரையக் கற்றுக் கொடுங்கள், கலைப்பொருட்கள் உருவாக்க நேரம் செலவிடுங்கள்.

* விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

* குழந்தைகளுடன் செலவிடும் நேரமே அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்!

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Advertisement

Recommended For You

About the Author: Julie